தமிழ்த் துறையின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் ஆவார். லேசான அறிகுறியோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. மௌன ராகம், நாயகன், தளபதி, அலைபாயுதே போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் மணிரத்னம். இவர் வரலாற்றை மையமாக கொண்ட பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெல்லுங்க உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் வெளியாக உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார், பிரபு, நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து உள்ளனர்.

மிகவும் எதிர்பார்ப்பை கிளம்பியுள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் பெறும். மேலும் பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் மற்றும் தமிழ்த் திரையுலகில் முக்கிய மைல்கல்லை எட்டும் என ரசிகர்களால் எதிர்ப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிறிது நாட்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் படம் வரலாற்றை தவறாக திரித்து எடுக்கப்பட்டுள்ளது என வழக்கு தொடுத்தனர். பெரும் சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் மணிரத்னதிற்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கொரோனா தோற்று ஏறுமுகமாகவே உள்ளது. பல்வேறு பிரபலங்களும் தோற்றால் கடந்த சில தினங்களாக பாதிக்கபட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் மற்றும் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று இயக்குனர் மணிரத்னம் கொரோனவல் பாதிக்கப்பட்டுள்ளார். மேற் சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில். சேர்க்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் பீதியை கிளப்பியுள்ளது.