காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைப்பெற்று வருகிறது. இதில் இந்தியா தனது பதக்க வேட்டையை ஆரம்பித்துவிட்டது. பளு தூக்குதலில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா அணி இதுவரை நான்கு பதக்கங்களை வென்றுள்ளது. இதில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி ஒரு வெண்கலம் அடங்கும். நேற்று நடைபெற்ற பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீரர்கள் நான்கு பதக்கங்களை வென்றுள்ளனர். மீராபாய் சானு 49 கிலோ பளு தூக்குதல் பிரிவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.

முன்னதாக, சங்கேத் சர்கார் 55 கிலோ பிரிவில் வெள்ளி வென்று இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கினார். குருராஜா பூஜாரி 61 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார். பிறகு, பிந்த்யாராணி தேவி, பெண்களுக்கான 55 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கத்தைப் வென்றுள்ளார். இந்தியா பதக்கங்களை வென்றுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பல பதக்கங்களை இந்தியா பெறவேண்டும் எண்டு பாராட்டியுள்ளார்.

பளுதூக்குதலில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா அணி இன்னும் பதக்கங்களை வெல்லும் என எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் இன்று நடைபெறும் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி பாக்கிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்தியா அணி வேல்ஸ் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஏற்கனவே கானா அணியை 5-0 கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக இரண்டு பாதகங்களை வென்றுள்ளது.