கடந்த 11 ஆம் நாள் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் OPSஸை அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு பின் செய்தியாளரை சந்தித்த ஓபிஸ் அதிமுகவில் இருந்து நீக்குவது சர்வாதிகாரத்தின் உச்சம் என கூறினார், மேலும் சட்ட விதிகளின் படி இந்த அறிவிப்பு செல்லாது. மேலும் எந்த நடவடிக்கையாலும் என்னை கட்டுப்படுத்த முடியாது எனவும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஸ் கூறியிருந்தார். கடந்த சில நாட்களாக அதிமுகவில் நடக்கும் இம்மோதல்களால் அரசிலியலில் பேசு பொருளாகி உள்ள நிலையில், ஓபிஸ் தரப்பின்னர் அதிமுகவின் அலுவலகத்தை அடித்து சேதப்படுத்தினர். இந்த பிரச்சனையால் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

பிறகு சீல் அகற்றப்பட்டதை அடுத்து அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் மற்ற ஊழியர்களும் சென்று ஒவ்வொரு அறையாக பார்த்தனர். அங்கிருக்கும் அறையில் அனைத்து பொருள்களும் சிதறிக் கிடந்தது, மேலும் கடப்பாரையால் உடைக்கப் பட்டிருந்தது. அலங்கோலமாக சிதறிக் கிடைக்கும் அலுவலகத்தில் மேஜை, நாற்காலிகள், கம்ப்யூட்டர் மற்றும் மத்த ஆவணங்களும் சிதறிக் கிடப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் இங்கிருந்த முக்கிய ஆவணங்கள் பல காணவில்லை என சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் வாங்கிய சில பரிசுப் பொருட்களையும் காணவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதிமுகவின் முக்கியமான புள்ளி விவரக் கணக்குகள் சார்ந்த கோப்புகள், பிற முக்கிய கோப்புகள், கம்ப்யூட்டரில் இருந்த ஹார்டு டிஸ்க் முதலிய பொருட்களும் காணவில்லை எனக் கூறியுள்ளார்.
