தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ‘புதுமைப்பெண் திட்டத்தை’ அறிமுகப்படுத்தி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்து உள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை கடந்த பட்ஜெட் கூட்டத்தில் வெளியிட்டார். இதன்படி தமிழ் நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

மேலும் அவர்கள் உயர் படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு படித்து முடிக்கும் வரை இந்த தொகையானது நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதி இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் மேலும் இத்திட்டமானது ஆசிரியர் தினமான இன்று முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளது.