நடந்து முடியாத 4வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு நன்றாக நடத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதற்கு நன்றி செலுத்தி இருந்த மு.க.ஸ்டாலின் இது போன்ற சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு மேலும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தது இருந்தார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற திரௌபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜெகதீப் தன்கர் ஆகியோரை வாழ்த்துவதற்காக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இன்று மாலை இருவரையும் தனித்தனியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துவதற்கு அனுமதி தந்ததற்காக நன்றி தெரிவித்தார்.

பிறகு தமிழ்நாட்டின் நலன் சார்ந்த விரிவான கோரிக்கைகள் மற்றும் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை ஆகியவற்றைப் பற்றி பேசியதாக தெரிகிறது. மேலும் முக்கியமான பிரச்சனையான நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு பரிசீலனை செய்து விரைந்து முடிவெடுக்குமாறும் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.