தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 12ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதனைத் தொடந்து ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு ஏற்பட்டதை அடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையில் கொரோனா தொற்று உறுதி ஆனதால் வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொண்டார். அதன் பிறகு கடந்த 15ஆம் தேதி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில் “முதல்வர் ஸ்டாலினுக்கு தேவையான சிகிச்சைகள் அனைத்தும் முடிந்தது, மேலும் அவர் பூரண குணமடைந்து வருகிறார் சிறிது நாட்கள் ஓய்வு தேவை” என கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் அவர் பூரண குணம் அடைந்து வீட்டார் மற்றும் நாளை வீடு திருபுவர் என எதிர் பார்க்கப்படுகிறது. பூரண குணம் அடைந்தாலும் மருத்துவர்கள் ஒரு வார காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளனர். இதனால் வரும் அரசியல் விழாக்கள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பாரா? இல்லையா? என கேள்விக் குறியாக உள்ளது.
