தற்போது அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். முதல் முறையாக ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்நோயானது உலகம் முழுதும் பரவி வருகிறது. இந்நோய் இதுவரை 75 நாடுகளுக்கு பரவியுள்ளது. மேலும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 3 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மூவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்படத்தக்கது. அதிவேகமாக இந்நோய் பரவி வருவதால் இந்நோய் சர்வதேச அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் செய்தியாளராய் சந்தித்து இதனை அறிவித்தார். ஏற்கனவே கொரோனா நோய் உலகம் முழுதும் பரவி பல பேர் உயிரை காவு வாங்கியது. இப்பொது மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் குரங்கு அம்மை நோய் உலகம் முழுதும் பரவி பீதியை கிளப்பி உள்ளது.