செஸ் ஒலிம்பியாட் போட்டி தற்போது சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் இப்போட்டியானது வரும் 9ஆம் தேதி முதல் முடிய உள்ளது. இதன் தொடக்க விழா கடந்த மாதம் 28ஆம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பல பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 187 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். தற்போது 8வது சுற்று இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இதுவரை நடந்த போட்டிகளில் மொத்தமாக 13 புள்ளிகள் பெற்று அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. மேலும் தலா 12 புள்ளிகள் பெற்று உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தியா இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன. போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் யார் முதல் இடத்தை பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

ஒரு புள்ளி வித்தியாசத்தில் இந்தியா அணி மூன்றாம் இடத்தில் உள்ளது. வரும் 9ஆம் தேதி இப்போட்டி முடிய உள்ள நிலையில் இந்தியாவின் நட்சத்திர மற்றும் ஜாம்பவான் வீரரான முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்க் தோனி கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர் வீராங்கனைகள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
