தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர்களில் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் முக்கியமான புள்ளிகள் ஆவார்கள். 90களுக்கு முன்னர் இளையராஜா தமிழ் சினிமாவை கட்டி ஆண்டு கொண்டு இருந்தார். ‘அன்னக்கிளி’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இளையராஜா அறிமுகம் ஆனார்.

இதுவரை ஆயிரம் படத்திற்கு மேல் இசையமைத்து உள்ளார். அதே போல 90களுக்கு பிறகு ‘ரோஜா’ படத்தின் மூலமாக ஏ.ஆர்.ரகுமானை அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் மணிரத்னம். இளையராஜா எப்படி 90களுக்கு முன்னனர் இருந்தாரோ அதேபோல ஏ.ஆர்.ரஹ்மான் 90களுக்கு பிறகு டாப்பில் இருந்தார். ஜாம்பவான் இசையமைப்பாளராக கருதப்படும் இருவரும் பல விருதுகளையும் வென்றுள்ளனர்.

குறிப்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல சமீபத்தில் இசைஞானி இளையராஜா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருவரும் தங்களது கடின உழைப்பின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார்கள். தற்போது இருவரும் சேர்ந்து ஏர்போர்ட்டில் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியதாவது “நாங்கள் பல்வேறு நாடுகள் சென்று திரும்பினாலும் எங்களது இலக்கு எப்போதும் தமிழ்நாடுதான்” எனகூறியுள்ளார் . இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.