நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரன், பிரகாஷ் ராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்து ஆகஸ்ட் 12ஆம் ‘விருமன் ‘ படம் வெளியாக உள்ளது. முத்தையா இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார். இப்படத்தின் ‘கஞ்சா பூவு கண்ணாலே’ பாட்டு சில நாட்களுக்கு மின்னார் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. பிறகு இப்படத்தின் ‘மதுர வீரன்’ பாடலின் விடியோவை இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.

இப்படத்தின் கதையானது கிராமத்தில் நடக்கும் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கார்த்தி நடித்த கிராமப்புற படங்களான ‘பருத்தி வீரன்’ , ‘கொம்பன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததை அடுத்து, இப்படமும் மாபெரும் வெற்றி அடையும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள முத்தையா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, இயக்குனர் பாரதி ராஜா மற்றும் ஷங்கர் ஆகியோ கலந்து கொண்டனர்.

மேலும் தொடர்ந்து பேசிய யுவன் ஷங்கர் ராஜா இந்த படம் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறினார். மேலும் சூர்யாவை அஞ்சான் படத்திலும், கார்த்தியை பிரியாணி படத்திலும் நான் பாட வைத்தேன் என கூறினார். இசையால் மக்களை ரீச் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் மனைவி சொல்வதை அனைவரும் ஃபாலோ செய்கிறார்கள் அதைப்போலவே நானும் செய்கிறேன். விரைவில் மதுரையில் ஒரு இசைக்கச்சேரி வைக்க உள்ளேன் என கூறினார்.
