தேசியக்கொடி ஏந்த போவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது!😥 – நீரஜ் சோப்ரா வேதனை!

இந்தியாவின் ஈட்டி எரித்தலின் கதாநாயகன் நீரஜ் சோப்ரா தான் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்காதது ஏமாற்றம் அளிக்கிறது என வருத்தம் தெரிவித்து உள்ளார். சமீபத்தில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார். நான்காவது முயற்சியின் போது அவரது இடுப்பில் பிடிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டது. அதைக் குறித்து அவர் ட்விட்டரில் இதை பற்றி பகிர்ந்து உள்ளார். அவர் கூறியதாவது “பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நான் கலந்து கொள்ள போவது இல்லை என உங்களிடம் தெரியப்படுத்துவதில் நான் வருத்தம் அடைகிறேன்.

neeraj-chopra
Neeraj Chopra

உலக சாம்பியன்ஷிப் போட்டியின் நான்காவது முயற்சியில் எறிதலின் போது என் இடுப்பில் ஏற்பட்ட இழுப்புக்குப் பிறகு நான் அசௌகரியமாக உணர்ந்தேன். அமெரிக்காவில் உள்ள மருத்துவக் குழுவால் நேற்று மருத்துவரீதியாக ஆய்வு செய்ததில், ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. இதனால் அடுத்த சில வாரங்களில் நான் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப் பட்டுளேன். காயத்தால் எனது பட்டத்தை பாதுகாக்க முடியாமல் போனதற்கும், தேசத்தை முன்னேற்றி நடத்துவதற்கான மற்றொரு வாய்ப்பை இழந்ததற்கும் நான் வேதனைப்படுகிறேன். முக்கியமாக தொடக்க விழாவில் போது இந்திய அணியின் கொடியை ஏந்தியவனாக இருக்கும் வாய்ப்பை இழந்ததற்காக நான் ஏமாற்றம் அடைந்தேன்.

world-javelin-athlete-winners

இது நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு கௌரவமாகும். கடந்த சில நாட்களாக நான் பெற்ற அனைத்து அன்புக்கும் ஆதரவிற்கும் முழு நாட்டிற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் வரும் வாரங்களில் பர்மிங்காமில் நடைப்பெற்ற உள்ள போட்டியில் என் சக இந்திய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த என்னுடன் சேர்ந்து வாழ்த்த உங்களை அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த்!” என கூறியுள்ளார்.

neeraj-chopra-tweet
Spread the Info

Leave a Comment