உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள ஒரிகான் நகரில் நடைப்பெற்றது. கடந்த 15ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி இன்று இறுதி கட்டத்தை எட்டியது. 22 பேர் கொண்ட இந்தியா அணி இத்தொடரில் பங்கேற்றது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவும் பங்கேற்றார். இன்று காலை நடைப்பெற்ற ஈட்டி எரிதல் இறுதிச்சுற்று போட்டியின் ஆரம்பத்திலேயே நீரஜ் சோப்ரா சொதப்பினார். முதல் வாய்ப்பிலேயே foulலோடு ஆரம்பித்த நீரஜ் சோப்ரா இரண்டாவது வாய்ப்பில் 82.39 மீட்டர் மற்றும் 3வது வாய்ப்பில் 86.37 மீட்டர் எறிந்தார். முதல் மூன்று வாய்ப்புகள் முடிவில் நான்காம் இடத்திலே இருந்தார். தனது கடைசி வாய்ப்பில் அபாரமாக ஈட்டியை வீசி 88.13 மீட்டர் எறிந்தார். இதனால் இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மேலும் கிரெனடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் தங்கம் வென்றார். இந்தப் பதக்கமானது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெல்லும் முதல் பதக்கமாகும். வெள்ளிப் பதக்கம் வென்ற போதிலும் இது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. இப்போட்டி முடிந்ததும் பேசிய நீரஜ் சோப்ரா இன்று ஒரு நல்ல அனுபவம். இதுபோன்ற காற்று உள்ள சூழ்நிலையில், நான் நிறைய கற்றுக் கொண்டேன். தகுதிக்குப் பிறகு, நான் நன்றாக உணர்ந்தேன், ஆனால் ஒவ்வொரு நாளும் வேறுபட்டது மற்றும் சில சிக்கல்கள் இருந்தன. இன்று பெற்ற வெள்ளிப் பதக்கத்தால் நான் மகிழ்ச்சி அடைந்து உள்ளேன். மேலும் அடுத்த முறை பதக்கத்தின் நிறத்தை மாற்ற முயற்சி செய்வேன். என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
