மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்திய நத்திங் போன்-1இன் வெளியீடு லண்டனில் நடைபெற்றது. இந்தியாவின் youtuberகள் பார்ப்பதற்காக நேரலையில் ஒளிப்பரப்பட்டது மேலும் தென்னிந்திய youtuberகளுக்கு இந்த போன் review யூனிட்டுகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. நத்திங் ஃபோன்-1 பிரீமியம் மிட்-ரேஞ்ச் 5ஜி ஸ்மார்ட்போனாக தனித்துவமான வெளிப்படையான வடிவமைப்புடன் வந்துள்ளது. இது ஏன் வித்தியாசமானது என்றால், இது transparent back panelலோடு வருகிறது. மேலும் இதில் வடிவமைக்கப்பட்டுள்ள LED லைட்டுகள் இதன் தோற்றத்தை மேலும் அழகாக்குகிறது. இந்த LED லைட்டுகள் பல சிறப்பம்சங்களைக் கொண்டு உள்ளது. அதாவது இந்த LED லைட்டுகள் சில notificationகளுக்கு ஏத்த மாதிரி ஜொலிக்கும். உதாரணத்திற்கு charge ஏறும் பொழுது எவ்வளவு charge ஏறுகிறது என்பதை இந்த LED லைட்கள் மூலமா தெரிந்து கொள்ளலாம்.

பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த போனின் விலையைப் பற்றி பாப்போம். 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜின் அடிப்படை மாடலின் விலை இந்தியாவில் ரூ.31,999 ஆகவும் 8GB RAM மற்றும் 256GB Storage கொண்ட நடுத்தர வகையின் விலை ரூ. 35,999 ஆகவும் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜின் மிக உயர்ந்த மாடல் ரூ. 38,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இது Black மற்றும் White நிறங்களில் கிடைக்கும். விலையானது எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது என பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க இந்த போனின் மேல் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த போனில் ஹார்டுவேரில் சில பிரச்னை உள்ளது அதனால் கருப்பு நிற டிஸ்பிலே பச்சையா(green tinting) தெரிகிறது என கூறியுள்ளனர். மேலும் ஒரு சிலர் பஞ்ச் ஹோல் கேமராவின் டிசைனும் சரியாக இல்லை கோளாறாக உள்ளது எனவும் குற்றம் சாற்றி உள்ளனர். முதல் போனிலேயே இவ்வளவு பிரச்னையா என review செய்பவர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இப்பிரச்சனை குறித்து நத்திங் நிறுவனம் பதில் அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.