என்ன உள்ள இருக்குறது எல்லாம் அப்டியே தெரிது !!!😲 Transparent டிசைனோடு வெளியானது Nothing போன்.📱

Nothing Phoneன் வெளியீடு லண்டனில் நடைபெற்றது. இந்தியாவின் youtuberகள் பார்ப்பதற்காக நேரலையில் ஒளிப்பரப்பட்டது. நத்திங் ஃபோன் (1) பிரீமியம் மிட்-ரேஞ்ச் 5ஜி ஸ்மார்ட்போனாக தனித்துவமான வெளிப்படையான வடிவமைப்புடன் வந்துள்ளது. முதலில் Nothing போனின் அம்சங்களை பார்ப்போம். இது வரை வந்த மொபைல் போன்களில் இது வித்தியாசமானது. இது transparent back panelலோடு வருகிறது. மேலும் இதில் வடிவமைக்கப்பட்டுள்ள LED லைட்டுகள் இதன் தோற்றத்தை மேலும் அழகாக்குகிறது. இந்த LED லைட்டுகளில் சில சிறப்பம்சங்கள் உள்ளது. அதாவது இந்த LED லைட்டுகள் சில notificationகளுக்கு ஏத்த மாதிரி மாறுகிறது. உதாரணத்திற்கு charge செய்யும் பொழுது எவ்வளவு charge ஏறுகிறது என்பதை இந்த LED லைட் மூலமா தெரிந்து கொள்ளலாம்.

nothing-one-smart-phone

நத்திங் ஃபோன் (1) விவரக்குறிப்புகள்

நத்திங் ஃபோன் (1) 6.55-இன்ச் 10-பிட் OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. திரையானது 2,400 x 1,080 பிக்சல்கள் resolution மற்றும் , HDR10+ கன்டென்ட் சப்போர்ட் , 1,200 nits இன் peak brightness மற்றும் 120Hz இன் மிகப்பெரிய adaptive refresh rate ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது Qualcomm Snapdragon 778G+ செயலி மூலம் இயக்கப்படுகிறது, மற்றும் Adreno 642L GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது, 12GB வரை ரேம் மற்றும் 256GB வரை UFS 3.1 native ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.

nothing-one-smart-phone

இந்தியா வெளியிட்டு விவரம்
நத்திங் ஃபோன்-1னின் அடிப்படை மாடல் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜின் விலை இந்தியாவில் ரூ.31,999, 8GB RAM மற்றும் 256GB Storage கொண்ட நடுத்தர வகையின் விலை ரூ. 35,999, 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜின் மிக உயர்ந்த மாடல் விலை ரூ. 38,999 ஆகவும் நிர்ணயயிக்கப்பட்டுள்ளது. மேலும் இது Black மற்றும் White நிறங்களில் கிடைக்கும்.

Spread the Info

Leave a Comment