தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கீழ் ‘புதுமைப்பெண் திட்டம்’ கடந்த பட்ஜெட் தொடரில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை நேற்று மு.க. ஸ்டாலின் சென்னயில் தொடங்கி வைத்தார். இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் படி அரசு பள்ளிகளில் 6ஆம் முத்த 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதந் தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். மாதம் 7ஆம் தேதி இந்த பணமானது நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். இத்தொகையானது மாணவிகள் தங்களது உயர் படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு படித்து முடிக்கும் வரை செலுத்தப்படும். இதுவே புதுமைப்பெண் திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.

இது திட்டத்திற்கு அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்து உள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளரை சந்தித்த அவர், திமுக செயல்படுத்திய புதுமைப்பெண் திட்டம் நீடூழி வாழ்க என கூறியுள்ளார்.

அதே போல் பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த அதிமுகவின் எம்.பியானா ரவீந்திரநாத் புதுமைப்பெண் திட்டமானது கல்லூரியில் படிக்க மாணவிகளை ஊக்குவிக்கும். இதை செயல்படுத்திய அரசுக்கும் ஏன் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.