ஈ.பி.எஸ் உடன் இணைந்து பணியாற்ற தயார் – அழைப்பு விடுத்த ஓ.பி.ஸ்!

கடந்த மாதம் ஜூலை-11 ஆம் தேதி அதிமுகவிலிருந்து ஓபிஸ் அவர்களை எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். மேலும் இடைக்கால செயலராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்க பட்டார். பிறகு ஓபிஸ் அவர்கள் இந்த பொதுக்குழு நான் இல்லாமல் எப்படி செல்லும் மேலும் இடைக்கால செயலராக எடப்பாடி பழனிச்சாமி தேந்தெடுத்தது செல்லாது என கூறி நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

edappadai-palaniswami
Edappadi Palaniswami

நேற்றைய தினம் நீதிமன்றத்தின் முடிவு ஓபிஸ்சுக்கு சாதகமாக அமைந்தது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனி செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் கூறியது. இதைத் தொடர்ந்து ஓபிஸ் அவர்கள் செய்தியாளரைச் சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது “மனக்கசப்பை விட்டு ஒன்றுபட்டு செயல்படுவோம்.

o-paneer-selvam
O. PaneerSelvam

இந்த அதிமுக கட்சியை திரு.எம்.ஜி.ஆர் உருவாக்கினார், அதன் பிறகு ஜெயலலிதா அவர்கள் வளர்த்து வந்தார். இரட்டை தலைமை என்பது பிரச்சனை கிடையாது. சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து செயல்பட தயாராக உள்ளேன்” என அவர் கூறினார்.

Spread the Info

Leave a Comment