இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் விக்ரம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்தார். கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி வெளியான இப்படமானது மாபெரும் வெற்றி அடைந்தது. வெளிவந்து 50 நாட்கள் மேல் ஆனாலும் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. மேலும் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்த நடிகர் சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.
இந்த விக்ரம் படமானது லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் இயக்கிய ‘கைதி’ படத்தின் தொடர்ச்சியாக உள்ளதால் இது ‘லோகி யூனிவெர்ஸ்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. மேலும் இதுவரை 400 கோடிகளுக்கு மேல் இப்படமானது உலக அளவில் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

படம் ஒரு புறம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனாலும் இசை அமைப்பாளர் அனிருத்தின் இசை வேற லெவல் என்று சொல்லலாம். கமலஹாசன் எழுதி அனிருத் இசையமைத்த ‘பத்தல பத்தல’ பாட்டும் அனைவரிடமும் வரவேற்பு பெற்றது.மேலும் இவர் போட்ட BGMமை பற்றி சொல்லவே வேணாம். ‘once upon a time’ , ‘rolex theme’, ‘sandhanam theme’ என அனைத்து themeகளும் ரிங்க்டோன், காலர் ட்யூனாக மாறியது.

இந்நிலையில் படக்குழுவில் இருந்து ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘Once Upon a Time There Lived a Ghost’ வீடியோ வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. கிளைமாக்ஸில் நடக்கும் சண்டைக் காட்சியை மையப்படுத்திய இப்பாடலை படத்தில் அனைவரும் ரசித்து கொண்டாடினர். இப்போது வீடியோ வெளியாகி உள்ளதால் மிகவும் வைரலாகி வருகிறது.