கடந்த சில நாட்களாக அதிமுகவில் EPS மற்றும் OPSக்கு இடையே நடக்கும் மோதல்கள் தமிழக அரசியலில் பெரும் பேசு பொருளாக உள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி பேசுவது தொடர் கதையாகவே உள்ளது. இந்நிலையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தற்காலிக அதிமுகவின் பொது செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி 18 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதில் ஓபிஸ்ஸின் இரு மகன்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அடங்குவர். இதை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் இது சர்வாதிகாரத்தின் உச்சம் மேலும் இதனால் என்னை கட்டு படுத்த முடியாது எனவும் கூறினார்.

இதன் பின் அவர் வெளியிட்ட அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட 22 பேரை நீக்குவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து இன்று மேலும் 44 பேரை நீக்குவதாக அறிவித்துள்ளார். இதில் EPSன் ஆதரவாளர்களான சி.வி. விஜயபாஸ்கர், பெஞ்சமின், பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 44 பேரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.