ஓபிஸ் பன்னிர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 18 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கடந்த 11ஆம் நாள் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் ஓபிஸ்ஸை அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ஓபிஸ் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயப்ரதீப், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட 18 பேரை அதிரடியாக நீக்கியுள்ளார் பழனிசாமி.

இதன் பின் செய்தியாளரை சந்தித்த ஓபிஸ் அதிமுகவில் இருந்து ரவீந்திரநாத்தை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம் என கூறினார். மேலும் இது சட்ட விதிகளின் படி இந்த அறிவிப்பு செல்லாது எனவும் எந்த நடவைக்கையாலும் என்னை கட்டு படுத்த முடியாது எனவும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஸ் கூறியுள்ளார். இதன் பிறகு பழனிச்சாமி, கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் உட்பட 22 பேரை நீக்கியுள்ளதாக ஓபிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளதால் 22பேரை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக ops அறிவித்தார் கடந்த சில நாட்களாக அதிமுகவில் நடக்கும் இம்மோதல்களால் அரசிலியலில் பேசு பொருளாகி உள்ளது.