“டிங் டாங் கொரியர் சர்வீஸ்” – இன்று முதல் அரசு பேருந்துகளில் பார்சல் சர்விஸ்!

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் பார்சல் சேவை இன்று தொடங்கியது. பொது மக்கள், சிறு வியாபாரிகளின் கோரிக்கைகளை ஏற்று இத்திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் அரசு போக்குவரத்து துறையில் ஏற்படும் நஷ்டங்களை குறைக்கவும் இதனால் வியபாரிகள் மற்றும் பயன் அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது. இத்திட்டத்தின் முதற் கட்டமாக இன்றிலிருந்து திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, ஓசூர் ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு பார்சல் சேவையை தொடங்க உள்ளது.

setc-bus
Tamilnadu Goverment Bus

தினசரி வாடகை மற்றும் மாத வாடகையில் மக்கள் பார்சல்களை அனுப்பலாம். திருச்சி to சென்னை, ஓசூர் to சென்னைக்கு ரூ.210 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுரை to சென்னைக்கு ரூ.300 கட்டணம் எனவும், திருநெல்வேலி to சென்னைக்கு ரூ.390 கட்டணம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி to சென்னை மற்றும் செங்கோட்டை to சென்னைக்கு ரூ.390 கட்டணம் எனவும், கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.330 கட்டணம் எனவும், நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் 80 கிலோ வரை உள்ள பார்சல்களுக்கு அடங்கும். இதனால் சாமானிய மக்கள் மாற்று சிறு வியாபாரிகள் பயன் அடைவார்கள் என கூறப்படுகிறது. மேலும் தனியார் வாகனங்களில் கட்டணம் அதிகம் வசூலிக்கும் பொருட்டு அரசே இந்த திட்டத்தை கொண்டு வந்ததால் மக்கள் மற்றும் வியாபாரிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Spread the Info

Leave a Comment