தமிழ்த் துறையின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் ஆவார். திரைக்கதைக்கு தனி உயிர் கொடுத்து எடுப்பது அவரது ஓவ்ன் ஸ்டைல். மௌன ராகம், நாயகன், தளபதி, அலைபாயுதே போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் மணிரத்னம். மேலும் பழங்கதைகள், இதிகாசங்கள் இவற்றை மையமாக கொண்டு படம் எடுப்பவர். இப்போது வெளிவர இருக்கும் வரலாற்றை மையமாக கொண்ட கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி உலகெங்கும் வெளிவர உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகமானது வெளியாக உள்ளது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய், சரத்குமார், பிரபு, நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து உள்ளதால், மிகவும் எதிர்பார்ப்பை கிளம்பியுள்ளது. இந்த படம் மிகப்பெரிய வெற்றிப் பெறும், மேலும் பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் என கூறப்படுகிறது. தமிழ்த் திரையுலகில் முக்கிய மைல்கல்லை எட்டும் என ரசிகர்களால் எதிர்ப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிறிது நாட்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் படம் வரலாற்றை தவறாக திரித்து இயக்குனர் மணிரத்னம் எடுத்துள்ளார் என வழக்கு தொடுத்தனர். சர்ச்சையில் சிக்கிய இப்படத்தை பலர் பாராட்டி வந்தாலும் ஒரு தரப்பினர் எதித்து வருகின்றனர்.

படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்ட் ஆனது. படக்குழுவினர் அவ்வப்போது படம் சம்மந்தமான விடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் சீயான் விக்ரம் பேசும் டப்பிங் வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. இப்பொது ஏ.ஆர்.ரகுமான் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. புகழ் பெற்ற டிரம்ஸ் சிவமணி டிரம்ஸ்சில் தாளம் அடிப்பது போல் இந்த வீடியோ உள்ளது. அதற்கு ஏ.ஆர்.ரகுமான் மூமென்ட் போட்டு தலை அசைக்கிறார். இதோ அந்த வீடியோ 👇