தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம் ஆவார். திரைக் கதைக்கு தனி உயிர் கொடுத்து எடுப்பது அவரது தனிப்பட்ட ஸ்டைல் என்று கூறலாம். இதிகாச கதைகளை மையமாக கொண்டு கதை எடுப்பதில் கைதேர்ந்தவர் ஆவார். இவர் எடுத்த தளபதி, ராவணன் படங்கள் போன்றவை இதிகாசத்தை மையமாக கொண்டது. தற்போது வெளிவர இருக்கும் வரலாற்றை மையமாக கொண்ட கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமானது வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி உலகெங்கும் வெளிவர உள்ளது.

இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகமானது படப்பிடிப்பு முடிந்த நிலையில் வெளியாக உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத் குமார், பிரபு, நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து உள்ளனர். மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படமானது தமிழ்த் திரையுலகில் முக்கிய மைல் கல்லை எட்டும் என தமிழ் சினிமா ரசிகர்களால் எதிர்ப் பார்க்கப்படுகிறது.

படத்தின் டீஸர் ஜூலை மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படக்குழுவினர் அவ்வப்போது ‘பொன்னியின் செல்வன்’ சம்மந்தமான விடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.சில நாட்களுக்கு முன்னர் சீயான் விக்ரம் பேசும் டப்பிங் வீடியோ ஒன்றை யூட்டுப்பில் வெளியிட்டனர். கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம் டப்பிங் பேசி இருந்தார். அந்த டப்பிங் விடீயோவானது வைரல் ஆனது.

பிறகு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் டிரம்ஸ் சிவமணியின் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவைப் போலவே இன்று இப்படத்தின் ‘பொன்னி நதி’ கிலிம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. ‘பொன்னி நதி’ என்னும் முதல் பாட்டு மாலை 6 இன்று மணிக்கு வெளியாகும் நிலையில், இப்பாடலின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ👇