தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் மணிரத்னமும் ஒருவராவார். இவரின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் பாகம்-1 படம் வரும் செப்டம்பர்-30ஆம் தேதி அன்று உலகெங்கும் வெளியாக உள்ளது.

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, சரத்குமார், பிரபு, நாசர், ஜெயராம், பார்த்திபன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைப்பெற்றது. இதில் தமிழ் சினிமாவின் இரு கண்களாக கருதப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இப்படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ‘பொன்னி நதி’ மற்றும் ‘சோழா சோழா’ பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து ‘ராட்சஸ மாமனே’ பாட்டு வெளியாகி உள்ளது. இப்பாடலை ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம் மற்றும் மகேஷ் விநாயக்ராம் ஆகியோர் பாடியுள்ளனர். குறிப்பாக ஷ்ரேயா கோஷல் குரல் மிகவும் அருமையாக உள்ளது. இப்பாடல் தற்போது சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகிறது.