இந்தியா ஜனாதிபதி தேர்தல் நாளை நடைப்பெற உள்ளது. தற்போதைய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தின் பதவிக் காலம் முடியவிருக்கும் நிலையில் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் நாளை நடைப்பெற உள்ளது. தேர்தல் வேட்பாளர்களாக ஆளும் கட்சியான பாஜக சார்பாக திரௌபதி முர்முவும் எதிர் கட்சி சார்பாக யஸ்வந்த் சின்ஹாவும் போட்டியிட உள்ளனர். திரௌபதி முர்முவுக்கு அதிமுக, தெலுங்கு தேசம், மதசார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய காட்சிகள் ஆதரவளித்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்களான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். திமுக சார்பில் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதனிடையே திரௌபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.