தற்போதைய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடியவிருக்கும் நிலையில் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று தொடங்கியது. தேர்தல் வேட்பாளர்களாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக திரௌபதி முர்முவும் எதிர் கட்சி வேட்பாளராக யஸ்வந்த் சின்ஹாவும் போட்டியிட உள்ளனர். திரௌபதி முர்முவுக்கு அதிமுக, தெலுங்கு தேசம், மதசார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய காட்சிகள் ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் நாடாளுமன்றத்தில் உள்ள சட்டமன்ற வளாகங்களில் நடைப்பெறுகிறது. இன்று காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை நடைபெறும் நிலையில் முக்கியத் தலைவர்கள் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. வாக்கு பதிவுக்கு ஓட்டு சீட்டு பயன்படுத்தப்படும் நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பச்சை நிற வாக்குச்சீட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிங்க் நிற வாக்குச்சீட்டுகள் எம்.எல்.ஏகளுக்கும் கொடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 234 சட்ட மன்ற உறுப்பினர்களும் வாக்கு அளிக்க உள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தன் வாக்கை செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் தனது வாக்கை செலுத்தினர். மேலும் முக்கியத்தலைவர்கள் வாக்களித்து கொண்டு வருகின்றனர்.
