இந்தியாவின் 75வது சுதந்திர விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் வானொலியில் ‘மான் கி பாரத்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண தேசிய கொடியை மக்கள் வீடுதோறும் ஏற்ற வேண்டும் என கூறினார். மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை அனைவரும் தங்கள் DPயை சமூக வலைத்தளங்களில் வைக்குமாறு கூறினார்.

இதை குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று டிவிட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறியாராவது “இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கலாசாரம், சாதனைகள் மற்றும் வரலாற்றை கொண்டாடும் இந்த நேரத்தில் நமது நாட்டின் மூவர்ண தேசிய கொடியை கொண்டாடுவதற்கு நம் தேசம் தயாராகி வருகிறது. எனது சமூக வலைத்தளங்களில் நான் மூவர்ண தேசிய கொடியை வைத்துள்ளேன். நீங்கள் அதைப் போலவே இன்று முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை உங்களின் சமூக வலைதளங்களில் DPயாக நமது நாட்டின் மூவர்ண தேசிய கோடியை வைக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.

நாம் மிகவும் பெருமைபடக்கூடிய தேசிய மூவர்ண கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையா பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரின் முயற்சிக்கு நமது நாடு என்றும் கடமைப்பட்டிருக்கும். மூவர்ண தேசிய கொடியின் வலிமையையும், உத்வேகத்தையும் எடுத்துக்கொண்டு தேச முன்னேற்றத்துக்கு பாடுபடுவோம்” என அவர் கூறினார்.