சர்வதேச விளையாட்டுகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்! – முதல்வர் பிரதமருக்கு கோரிக்கை!

சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. கடந்த மாதம் ஜூலை 28ஆம் தேதி மிக கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரை முருகன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டு இருந்தனர். மேலும் மிக பிரமாண்டமாக தமிழ்நாட்டின் பல பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

chess-olympiad

மொத்தமாக 187 நாடுகளைச் சேர்ந்த 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள், வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இப்போட்டியின் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மெய்ய நாதன். செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் பதக்கங்களை வழங்கினார்.

napier-bridge
Napier Bridge

இதை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறியதாவது, “44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசு சிறப்பாக நடத்தி உள்ளனர். உலகில் உள்ள அனைத்து வீரர் வீராங்கனைகளை வரவேற்று, நம் நாட்டின் சிறப்பான கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்தியதற்காக பாராட்ட விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

narendra-modi
Prime Minister Narendra Modi

அதற்கு பதிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிலளித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது, “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அன்பான பாராட்டு வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. விருந்தோம்பல் மற்றும் சுயமரியாதை ஆகிய இரு குணங்களையும் தமிழர்களிடமிருந்து பிரிக்க முடியாதது.

mk-stalin
Chief Minister M.K. Stalin

இதை போன்ற உலக விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு தமிழ்நாட்டிற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என உங்கள் ஆதரவை கோருகிறேன். யாதும் ஊரே யாவரும் கேளிர்” என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Spread the Info

Leave a Comment