புஷ்பா – 2 படத்தில் வில்லியாக இருக்கும் பிரபல தமிழ் நடிகை – அட இவங்களா?😱

நடிகர் அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில், ராஷ்மிக்கா மந்தனா மற்றும் பலர் நடித்து 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கிய இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். படம் தெலுங்கில் வெளியானாலும் அனைத்து மொழிகளிலும் வரவேற்பு பெற்று பான் இந்தியா படமாக மாறியது. மேலும் வட இந்தியாவில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. படம் மட்டுமல்லாமல் பாடும் ஹிட் ஆனது.

allu-arjun
Allu Arjun

“ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா” பாட்டை கேட்டிராத ஆளே இருக்க முடியாது. ஆண்ட்ரியா ஹஸ்கி குரலில் பாடிய பாட்டில் சமந்தா நடனம் ஆடியிருப்பர். அல்லு அர்ஜுனின் ஆக்ஷன் காட்சிகள், ஆக்ரோஷமான டயலாக்குகள் அனைத்தையும் பிரபலங்கள் பலர் இன்ஸ்டாகிராம் ரீல்சில் வெளியிட்டனர். மேலும் ‘ஸ்ரீவள்ளி’ பாட்டு வெளிநாடு வரை ரீச் ஆனது. இப்படி பல சாதனைகள் படைத்த இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

samantha
Samantha

சில நாட்களுக்கு முன்னர் இரண்டாம் பக்கத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சவார்த்தைகள் நடந்ததாக தகவல்கள் வெளியானது. மேலும் படத்தின் கதாநாயகி ராஷ்மிக்கா மந்தனா இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்திலேயே கொல்ல படுவார், அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் கதை நகரும் என சில செய்திகள் வெளியாகின.

Allu Arjun

அந்த வரிசையில் அடுத்ததாக இப்படத்தில் வில்லியாக பிரியா மணி நடிப்பதாக கூறப்படுகிறது. நடிகை ப்ரியாமணி பருத்தி வீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றார். அதன் பின் மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், சாரு லதா படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை விட்டு தெலுங்கில் கவனம் செலுத்தினர். தற்போது புஷ்பா – 2வில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

priyamani
Priyamani
Spread the Info

Leave a Comment