இறுதிச்சுற்றில் பி.வி.சிந்து! சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்!

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த அரை இறுதிச்சுற்றில் பி.வி.சிந்து வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைப்பெற்ற அரை இறுதிப் போட்டியில் ஜப்பானை சேர்ந்த சாயன கவகாமியை எதிர்க் கொண்டார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய சிந்து முதல் செட்டை 21-15 என கைப்பற்றினார். பின்னர் அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி 21-7 என கைப்பற்றி நேர் செடிகளில் சாயனவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

p.v.sindhu

நடைபெற்ற மற்றொரு அரை இறுதிச் சுற்றில் சீனாவின் வாங் ஜீயி ஜப்பானை சேர்ந்த அய ஒஹோரியை 21-14 21-14 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து வாங் ஜீயியை எதிர்க் கொள்கிறார்.

Spread the Info

Leave a Comment