விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி வரி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியானது இன்று போராட்டம் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்களோடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அவர் மட்டும் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். இதில் தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது. இந்திய நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த சர்வாதிகாரத்தை யார் எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப் படுகின்றனர். இந்தியா நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லாமல் போய் விட்டது. நாடாளுமன்றத்தில் எந்த பிரச்சனையை பற்றி பேசுவதற்கு அரசு தயாராக இல்லை. கடந்த 100 ஆண்டுகளில் இந்திய நாட்டில் என்ன உருவாக்கப்பட்டது அவையனைத்தும் அழிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து அமைப்புகளும் மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படுகிறது. இந்த அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துகிறது.

வேலை வாய்ப்பின்மை தலை விரித்து ஆடுகிறது, விலைவாசி உயர்ந்து உள்ளது. மக்களிடம் உண்மை கொண்டு சேர்ப்பதை நான் நிறுத்த மாட்டேன், எனக்கு எந்த பயமும் கிடையாது. நாட்டில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது, மக்கள் என்ன பிரச்னையில் உள்ளனர் என்பது பற்றிய எந்த தகவலும் நித்தியமைச்சருக்கு தெரிவது இல்லை என அவர் கூறினார். இந்தப் போராட்டத்தால் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க பட்டது. தொடர்ந்து ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி மற்றும் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.