இந்தியா காங்கிரஸின் முன்னாள் தலைவர் மற்றும் நாடாளுமன்ற தலைவருமான ராகுல் காந்தி தமிழ்நாட்டில் பாதயாத்திரை செல்ல தீர்மானித்து உள்ளார். மொத்தமாக 148 நாட்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதயாத்திரை செல்ல திட்டமிட்டு உள்ளார். கடந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெறும் சரிவை சந்தித்தது. இதனால் காங்கிரஸ் கட்சி பலவீனமாக காணப்படுவதால் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளார். மேலும் இதற்கான பணிகள் அனைத்து மாநிலங்களிலும் நடைப்பெற்று வருகிறது. ராகுல் காந்தியோடு சேர்ந்து 300 பேர் பயணிப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் செல்லும் அனைத்து மாவட்டங்களில் தொண்டர்கள் சேர்ந்து பயணிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 25மீட்டர் செல்ல திட்டமிடப் பட்டுள்ளது.

தமிழகத்தில் மூன்று நாட்கள் பாதயாத்திரை நடைப்பெற உள்ளது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து திருவனந்தபுரம் செல்ல உள்ளார். கேரளா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அவர் சொந்தத் தொகுதியான வயநாட்டிலும் பாதயாத்திரை செல்ல உள்ளார். இந்த பாதயாத்திரையானது அனைத்து மாநிலங்களிலும் நடைப்பெறும் மேலும் காஷ்மீரில் முடியும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பலப்படுத்தும் நோக்கமாக கூறப்படுகிறது.