குஜராத்தில் சட்ட சபைத்தேர்தல் இந்த ஆண்டு நடைப்பெற உள்ளது. இதனால் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அகமதாபாத்து சென்று இருந்தார்.
அங்கு அவர் பேசியதாவது, “குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு இலவச மின்சாரமும், பொது நுகர்வோருக்கு 300 யூனிட்டுகள் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

கொரோனா நோயால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும் 3000 ஆங்கில கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டு அதில் பெண்களுக்கு இலவசமாக கல்வியை வழங்குவோம்.
ரூ1000க்கு விற்கப்படும் கேஸ் சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் . விவசாயிகள் கடன் 3 லட்சம் வரை வாங்கி இருந்தால் அதை தள்ளுபடி செய்யப்படும். மேலும் 10 லட்சம் வரை வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும்” என கூறியுள்ளார்.