பார்த்திபனுக்கு தன் கைப்பட கடிதம்💌 எழுதிய சூப்பர் ஸ்டார்!

நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கி நடித்து, ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில் வெளியான படம் ‘இரவின் நிழல்’. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிராகிட உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். புதுவிதமான இயக்குனர் என போற்றப்படும் பார்த்திபன் இப்படத்திலும் புதுமையை கையாண்டுள்ளார். இந்த படம் ஒரே ஷார்ட்டில் எடுக்கப்பட்ட படமாகும், அதாவது ‘non-linear-single -short-film’ என்று கூறப்படுகிறது. திரில்லர் பிலிம்மாக உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. யூடியுபில் விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறனுக்கும் பார்த்திபனுக்கும் கடந்த சில நாட்களாக வாக்குவாதம் ஆகியுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் சிலர் பாராட்டவே செய்துருக்கின்றனர்.

parthiban-rajini
parthiban-rajini

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை பாராட்டி உள்ளார். தன் கைப்பட எழுதியுள்ள அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது. இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன், ஒரே ஷார்ட்டில் முழு படத்தையும் எடுத்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்று, உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும்.. அவரது அனைத்து படக்குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏ.ஆர்.ரெஹ்மான் அவர்களுக்கும்.. முக்கியமாக படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும்.. எனது மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்..! என கூறியுள்ளார். இதோ அவர் கைப்பட எழுதிய கடிதம்👇

Spread the Info

Leave a Comment