ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் ஸ்மார்ட் போனிகளில் திணிக்கப்பட்டு அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இப்போது கிடைக்கும் அடிப்படை மாடல் ஸ்மார்ட் போனிகளிலேயே ஏகப்பட்ட அம்சங்களோடு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று இன்டர்நெட். நாளுக்கு நாள் இன்டர்நெட்டின் மோகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதனால் நிறுவனங்களும் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டேனா இருக்கின்றனர்.

2ஜி , 3ஜி, 4ஜி என அடுத்தடுத்து வளர்ந்து இப்பொது 5ஜி வரைவந்து நிற்கிறது. சமீபத்தில் 5ஜி அலைக்கற்றை உரிமத்திற்கான ஏலத்தை மத்திய அரசு நடத்தி இருந்தது. இதில் பிரபல நிறுவனங்களான ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ கலந்து கொண்டனர். இதில் ரிலையன்ஸ் நிறுவனம் 5ஜி அலைக்கற்றைகான ஏலத்தை எடுத்தது. இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து உள்ளார்.

உலகிலேயே அதிவேக இன்டர்நெட் சேவையாக கருதப்படும் 5ஜி முதல் கட்டமாக டெல்லி, சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் 5ஜி சேவை கொண்டு செல்லப்படும். அமெரிக்கா மற்றும் சீனாவை மிஞ்சும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர ரிலையன்ஸ் ஜிவ் நிறுவனம் துணை நிற்கும். இதற்காக 2 லட்சம் கோடி ரூபாயை செலவு செய்ய உள்ளதாக கூறினார்.