இந்தியா அணி மேற்கு இந்தியா தீவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. மொத்தமாக 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 T20 போட்டிகள் உள்ள இத்தொடர் ஜூலை-22 ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் 3 ரன்கள் மற்றும் இரண்டாம் போட்டியில் 2 விக்கெட் வித்யாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் வென்று உள்ளது. இந்நிலையில் இன்று 3வது ஒரு நாள் போட்டி நடக்க உள்ளது. இந்நிலையில் நேற்று இந்தியா விக்கெட் கீப்பர் அதிரடி பேட்ஸ்மேனான ரிஷாப் பந்த் இன்ஸ்டாகிராமில் வீடியோ கால் செய்து fun செய்து கொண்டிருந்தார். தன் சக வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா, சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோருடன் கலாட்டாவாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது ரிஷாப் பந்த் இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் பேட்ஸ்மேன்னான மகேந்திர சிங் தோனியிடம் வீடியோ கால் கனெக்ட் செய்தார்.

அப்போது தோனியின் மனைவி சாக்ஷி அந்த காலை எடுத்தார். அனைவரிடமும் ஹாய் என கையசைத்த தோனியின் மனைவி உடனே தோனியின் பக்கம் திருப்பினார். உடனே தோனி ஹாய் என கையசைத்தார். ரிஷாப் பந்த் “எப்டி இருக்கீங்க மஹி பாய், லைவ்லேயே இருங்கள்” என கூறினார். உடனே எம்.எஸ்.தோனி காலை கட் செய்து விட்டார். மொத்தமாகவே 7 நொடிகள் மட்டுமே தோனி வந்த இந்த விடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ 👇