பிரபல தமிழ் நடிகரான தனுஷ் சமீபத்தில் ஹாலிவுட்டில் நடித்து பிரபலமான படம் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான படம் ‘தி கிரே மேன்’. இந்நிறுவனம் ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’, ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’, ‘கேப்டன் அமெரிக்கா’ போன்ற படங்களை தயாரித்து உள்ளது. அந்த வரிசையில் இந்த ‘தி கிரே மேன்’ படம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்து கடந்த 22ஆம் தேதி ஓ.டி.டியில் வெளி வந்தது.

ஹாலிவுட்டின் அவெஞ்சர்ஸ் சீரியஸ் மற்றும் கேப்டன் அமெரிக்கா சீரியஸ் மூலம் புகழ் பெற்ற நடிகர் கிறிஸ் இவன்ஸ் இப்படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தில் தனுஷ் கௌரவ தோற்றத்தில் நடித்து இருந்தார். படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தோன்றிய தனுஷ் கொடுத்த வேலையே கச்சிதமாக செய்து இருந்தார். சில காட்சிகளில் தோன்றும் தனுஷ் ஆக்ஷன் சண்டைக் காட்சிகளில் மிரட்டி இருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய செய்தி வெளிவந்துள்ளது. சமீபத்தில் படக்குழு தனுஷின் கதாபாத்திரம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அவர் கதாபாத்திரத்தை ஹீரோவாக வைத்து படத்தை எதிர்பாக்கலாம் என கூறினர்.

மேலும் ரூஸோ சகோதரர்கள் இரண்டாம் பாகத்தை பற்றிய செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளனர். தி கிரே மேனின் தொடர்ச்சியானது இப்போது ஸ்டார் ரியான் கோஸ்லிங், இணை எழுத்தாளர் ஸ்டீபன் மெக்ஃபீலி ஆகியோருடன் நாங்கள் மீண்டும் உருவாக்க உள்ளோம். புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர்களான பால் வெர்னிக் மற்றும் ரெட் ரீஸ் எழுதி இத்திரைப்படம் உருவாக உள்ளது என கூறியுள்ளார்.