தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க திருச்சிக்கு வந்து இருந்தார். இவர் வருகையை அறிந்த அவரது ரசிகர்கள் பல மாவட்டங்களில் இருந்து படையெடுத்தனர். இக்கூட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். பின்பு போட்டி முடிந்த பிறகு கிளப்பில் உள்ள மொட்டை மாடியில் ஏறி நின்று தன் ரசிகர்களிடம் கையசைத்தார், உடனே அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் கத்தி ஆரவாரம் செய்தனர். இந்த நிகழ்வானது சமூக வலை தளங்களில் பேச்சு பொருள் ஆனது.

இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே ‘நேர் கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ திரைப்படத்தை இயக்கிய ஹெச்.வினோத் மூன்றாம் முறையாக நடிகர் அஜித் குமாரை வைத்து இயக்க உள்ளார். AK61 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஏற்கனவே வலிமை படைத்தாய் தயாரித்த போனி கஃபூர் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் முதல் முறையாக அஜித்தோடு மஞ்சு வாரியோர், கவின் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

அந்த வரிசையில் பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கே .ஜி.எப் – 2 படத்தில் நடித்த சஞ்சய் தத்தின் ‘அதிரா’ கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. தற்போது அவர் அஜித் குமாருடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இரண்டு பிரபலங்கள் முதல் முறை இணைய உள்ளதால் சஞ்சய் தத் ஒரு வேளை அவர் அஜித் குமாருக்கு வில்லனாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இக்கூட்டணி முதல் முறை இணைவதால் எதிர்பார்ப்பிற்கு பஞ்சம் இருக்காது என கூறலாம்.
