மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான சரவணா அருள் நடிக்கும் திரைப்படமான ‘தி லெஜெண்ட்’ திரைப்படமானது கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது. சரவணா ஸ்டோர்ஸ்ஸின் உரிமையாளரான சரவணன் அருள் தமிழ்த் திரையுலகில் முதல் முறையாக இப்படத்தில் நடித்து இருந்தார். மேலும் இப்படத்தின் ப்ரோமோஷன் மிக பிரமாண்டமாக இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ப்ரஸ் மீட், Adஸ் என இறங்கி வேலை பார்த்து இருந்தார் அண்ணாச்சி.

இயக்குனர் ஜே-டி ஜெர்ரி இயக்கிய இப்படத்திற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். மேலும் தமிழ்த் திரையுலகில் முன்னணி பிரபலங்களான பிரபு, யோகி பாபு, விஜய குமார், நாசர்,மற்றும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் என பிரபல நடிகர்கள் நடித்து இருந்தனர். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஒரு தரப்பினர் நன்றாக உள்ளது என கூறினாலும் இன்னோரு தரப்பினர் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்று கூறினர்.

ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல் இப்படத்தையும் கழுவி ஊற்றி இருந்தார். சரவணன் அவர்களுக்கு நடிப்பே வரல, ரோபோ போல் படம் முழுக்கவும் இருக்கிறார், படத்தின் திரைக்கதை சரியாகவே இல்லை. மேலும் “சுகருக்கு மருந்து கண்டுபுடிக்குறேனு சொல்லி நம்மள BP வர வச்சதுதான் மிச்சம்” என கடுமையாக விமர்சித்து இருந்தார். ஆனால் தான் நடித்த விளம்பரங்களில் இருந்து பல விமர்சனங்களை பார்த்தவர் அல்லவா அண்ணாச்சி.

அதை எல்லாம் பெருசாக கண்டு கொள்ளாமல் ஒரு வழியாக படம் எடுத்து வெளியிடவும் செய்து விட்டார். இந்நிலையில் அவர் போட்ட ஒரு ட்வீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. அதில் அவர் கூறியதாவது “ஊடக நண்பர்களுக்கு வணக்கம் உங்கள் அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் மனமார்ந்த நன்றி!!! விரைவில் சந்திக்கிறேன் சந்திக்கிறோம்” என கூறியுள்ளார். இந்த டிவீட்டால் அடுத்த படத்தின் அப்டேட்டா? இல்லை சக்ஸஸ் மீட்டா? என ரசிகர்கள் குழம்பி போய் உள்ளன.