கடந்த 2018ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சிக்கு வந்து இருந்தார்.
அதே நேரத்தில் மதிமுக கட்சியின் பொது செயலாளர் வைகோவும் வந்து இருந்தார். இருவரும் ஒரே நேரத்தில் வந்து இருந்ததால் இரு கட்சியின் தொண்டர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதில் மதிமுகவைச் சேர்ந்த இரண்டு பேர் காயம் அடைந்தனர். இதனால் காவல் துறையில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு கடந்த மாதம் விசாரிக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சீமான், சாட்டை துறை முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
இருவரும் சமரசம் தெரிவித்ததால் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் சீமான் மற்றும் அந்த வழக்கு சார்ந்த பிறரை விடுதலை செய்வதாக அறிவித்து உள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினர் தொடுத்த வழக்கில் இந்த மாதம் மறுபடியும் சீமான் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியுள்ளது.