பி.வி. சிந்து சாம்பியன்!🏸 பிரதமர்மோடி வாழ்த்து!🤝

சிங்கப்பூரில் நடைப்பெற்று வரும் பாட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று நடைப்பெற்றது. நேற்று நடைப்பெற்ற அரை இறுதிப் போட்டியில் ஜப்பானை சேர்ந்த சாயன கவகாமியை 21-15, 21-7 என வெற்றிப் பெற்று இறுதிசுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைப்பெற்ற இறுதிப் போட்டியில் சீனாவைச் சேர்ந்த வாங் ஜீயை எதிர்க் கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் சுற்றை அதிரடியாக விளையாடியே சிந்து 21-9 என கைப்பற்றினார்.

pv-sindhu-champion
pv-sindhu-champion

பிறகு தொடர்ந்து ஆடிய வாங் இரண்டாம் சுற்றை 22-11 என கைப்பற்றினர். சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் கடைசி செட் பரபரப்பாக சென்றது. இதில் 21-15 என மூன்றாம் செட்டைக் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார். 27 வயது ஆகும் பி.வி. சிந்து இதுவரை இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.

p.v.sindhu-3rd-title
p.v.sindhu

இந்த ஆண்டில் இவர் வெல்லும் மூன்றாவது டைட்டில் ஆகும்.சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tweet
Spread the Info

Leave a Comment