அதிதி ஷங்கரை விமர்சனம் செய்வது வருத்தம் அளிக்கிறது😐 – ராஜலக்ஷ்மி!

நடிகர் கார்த்தி நடித்து நாளை உலகெங்கும் வெளியாக உள்ள படம் ‘விருமன்’. இப்படத்தில் அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரன், சூரி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்து உள்ளனர். முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து இருக்கிறார். இப்படத்தின் இயக்குனரான முத்தையா இதற்கு முன்னரே நடிகர் கார்த்தியை வைத்து ‘கொம்பன்’ படத்தை இயக்கி உள்ளார். அதனால் இப்படமும் வெற்றி அடையும் என ஏத்திபார்க்கப்படுகிறது. சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்து இருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கும் அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கரின் மகள் ஆவார்.

viruman
Viruman

இப்படத்தில் வெளியான ‘கஞ்சா பூவு கண்ணாலே’ பாட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. பிறகு இப்படத்தின் ‘மதுர வீரன்’ பாட்டும் வெளியாகி வைரலானது. இந்த பாட்டை அதிதி ஷங்கரே பாடியுள்ளார். ஆனால் இந்த பாட்டை முதல் முதலாக விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலக்ஷ்மி தான் பாடியுள்ளார். ஆனால் படக்குழுவோ அதிதி ஷங்கரை வைத்து மீண்டும் பாட வைத்துள்ளார். மேலும் இதைப்பற்றி ராஜலக்ஷ்மியிடம் ஏதும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

rajalakshmi-aditishankar
Rajalakhmi – Aditi Shankar

சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதற்கு பின் இப்பாடல் அதிதி ஷங்கர் குரலிலே வெளியானது. இதனால் நெட்டிசன்கள் ராஜ லக்ஷ்மிக்கு துரோகம் நடந்து உள்ளது என அதிதி சங்கரையும் படக்குழுவினரையும் விமர்சித்து வருகின்றனர். மேலும் இதைக்குறித்து ராஜலக்ஷ்மி பேசியுள்ளார்.

suriya-karthi
Suriya -Karthi

இதை குறித்து அவர் கூறியதாவது, சினிமாவில் இது போல் விமர்சனம் வருவது சகஜம்தான். ஒரு பாட்டு மட்டும் பாடகியை தேர்ந்தெடுப்பது இயக்குனரின் வேலை. அதிதி ஷங்கரின் குரலானது ‘மதுர வீரன்’ பாடலுக்கு பொருத்தமாக உள்ளது. இதை குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை மேலும் அதிதி ஷங்கரை விமர்சனம் செய்வது வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார். கடந்த வருடம் வெளியான ‘புஷ்பா’ திரைப்படத்தில் இவர் பாடிய “ஹே சாமி” பாட்டு மாபெரும் வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Singer Rajalakshmi
Spread the Info

Leave a Comment