ஆற்றில் தவறி விழுந்த குட்டி யானையை🐘 தாயிடம் சேர்த்த வனத்துறையினர்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னர் வனப்பகுதியில் ஒட்டி அமைந்துள்ளது தமிழக -கேரளா எல்லை. உதகை, திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் கனமழை பெய்து வருத்துவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் பிறந்து சில தினங்களே ஆனா குட்டி யானை ஒன்று தவறுதலாக ஆற்றில் விழுந்து அடித்து வரப்பட்டது. இத்தகவலை அறிந்த கேரளா வனத்துறையினர் உடனடியாக விரைந்து சென்றனர்.

small-elephant

பல மணி நேர போராட்டத்திற்குப் பின் குட்டி யானையை பத்திரமாக மீட்டனர். அதன்பின் கூட்டத்தை பார்த்து பயந்த யானைக் குட்டியை அதன் தாயோடு சேர்த்தனர்.

Spread the Info

Leave a Comment