நடிகர் சூர்யா, நடிகை அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோர் நடித்து 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கிய இப்படத்தை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். கொரோனா காலக் கட்டத்தில் முழு ஊரடங்கு நிலையில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைவரும் ஓ.டி.டி தளங்களை நம்பி இருந்தனர். அப்போது வெளியான படம்தான் ‘சூரரைப்போற்று’ . ஓ.டி.டி தளம் அப்போதைய காலத்திற்கு பரிட்ச்சியம் இல்லாத ஒன்று அதனால் படம் ஓடுமா? என்ற எதிர்பார்ப்பை அனைவரிடமும் ஏற்படுத்தியது.

ஆனால் அதை அனைத்தையும் தவிடு பொடியாக்கிய சூரரைப்போற்று படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று அமோக வெற்றிபெற்றது. மேலும் 2020ஆம் ஆண்டின் சிறந்த படமாக பேசப்பட்டது. படம் மட்டுமல்லாமல் பாட்டும் சூப்பர் ஹிட் ஆனது. ‘காட்டுப்பயலே’ , ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றது. அப்போதில் இருந்தே பெரிதாக பேசப்பட்ட இப்படம் தேசிய விருது கண்டிப்பாக வெல்லும் என கூறப்பட்டது. அதை போலவே நாட்டின் 68வது தேசிய விருதுகள் போன மாதம் அறிவிக்கப்பட்டது.

இதில் சூரரைப்போற்று திரைப்படம் 5 விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகருக்கான விருது சூர்யா மற்றும் அஜய் தேவ்கான் உடன் பகிர்ந்துகொண்டார் . சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளி மற்றும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி. பிரகாஷ் பெற்று இருந்தனர். மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான விருதுகளை இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் பெற்று இருந்தனர். இந்நிலையில் இவரது ரசிகர் ஒருவர் சூரரைப்போற்று படத்தின் பாலிவுட்டில் சேர்க்கப்பட்ட ஒரு கட்சியை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். இக்கட்சியானது தமிழ் வெர்ஷனில் இடம் பெறவில்லை. இதோ அந்த காட்சி👇