நாம ஜெயிச்சுட்டோம் மாறா!💪 பல தேசிய விருதுகளை அள்ளிய ‘சூரரைப்போற்று’!

நடிகர் சூர்யா, நடிகை அபர்ணா பாலமுரளி, ஊர்வசி மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கிய இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். கொரோனா காலக் கட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது. இதனால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் அனைவரும் ஓ.டி.டி தளங்களை நம்ப வேண்டி இருந்தது. அந்த வரிசையில் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் 2020 ஆம் ஆண்டு ஓ.டி.டியில் வெளியானது. ஓ.டி.டி தளம் அப்போதைய காலத்திற்கு பரிட்ச்சியம் இல்லாத ஒன்று என்பதால் படம் ஓடுமா? என்ற எதிர்பார்ப்பை அதிகப் படுத்தியது.

soorarai-pottru
soorarai-pottru

ஆனால் அதை அனைத்தையும் தவிடு பொடியாகியது சூரரைப்போற்று. படம் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் 2020ஆம் ஆண்டின் சிறந்த படம் இது என்பது யாராலும் மறுக்க முடியாது. படம் மட்டுமல்லாமல் பாட்டும் சூப்பர் ஹிட் ஆனது. ‘காட்டுப்பயலே’ , ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அப்போதே இப்படம் தேசிய விருது கண்டிப்பாக வெல்லும் என கூறப்பட்ட நிலையில் இன்று அது சாத்தியமாகி உள்ளது. நாட்டின் 68வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் சூர்யா நடித்த சூரரைப்போற்று 5 விருதுகளை குவித்து உள்ளது.

suriya
suriya

சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளி மற்றும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி. பிரகாஷ் பெற்றுள்ளார். மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான விருதை இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் பெற்றுள்ளார். மொத்தமாக 5 விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. மேலும் நாளை தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் சூர்யா மற்றும் அவரின் ரசிகர்களுக்கு இது டபுள் ட்ரிட்டாக அமைந்து உள்ளது. மேலும் இயக்குனர் சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ் மற்றும் படக்குழுவினர் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

suriya
suriya
Spread the Info

Leave a Comment