தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12ஆம் நாள் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு ஏற்பட்டதை அடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவில் கொரோனா தொற்று இருந்தது உறுதி ஆனதால் வீட்டிலேயே தனிமை படுத்திக்கொண்டார். பிறகு சில பரிசோதனைகள் செய்ய வேண்டியுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

இதனையடுத்து பல தலைவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவமனை இருந்து அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது. இதில் “முதல்வர் ஸ்டாலினுக்கு தேவையான சிகிச்சைகள் அனைத்தும் முடிந்தது, மேலும் அவர் பூரண குணமடைந்து வருவதாகவும் ஆரோகியத்துடனும் உள்ளதாகவும் சிறிது நாட்கள் ஓய்வு தேவை” என கூறப்பட்டுள்ளது.
