நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என ரஜினிகாந்த் அவர்களே கூறி இருந்தார். நெல்சன் திலிப் குமார் இயக்கவுள்ள இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

மேலும் ‘பேட்ட’ மற்றும் ‘தர்பார்’ படங்களைத் தொடர்ந்து இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் 3வது முறையாக இசையமைக்க உள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

இப்படத்தை இயக்க இருக்கும் நெல்சன் அவர்கள் கடைசியாக நடிகர் விஜய்யை வைத்து எடுத்த ‘பீஸ்ட்’ திரைப்படம் எதிர்பாராத வெற்றி அடையவில்லை. அதே போல நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கடைசியாக நடித்த ‘அண்ணாத்த’ படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் ‘ஜெயிலர், படம் இருவருக்கும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் போஸ்டர் ஒன்று வெளியிட்டு உள்ளது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நிழல் போல ஒரு படத்தை வெளியிட்டு உள்ளது. அதில் நாளைய தினமான 22-08-2022 11AM என குறிப்பிட்டுள்ளது.
22.8.22 – 11:00 AM 🔥#Jailer pic.twitter.com/VIieMFd3qO
— Sun Pictures (@sunpictures) August 21, 2022
Twitter Embed Code Credits: Sun Pictures
இது என்னவாக இருக்கும்? படப்பிடிப்பு ஆரம்பிக்கப் போகுதா? இல்லை படத்தின் பூஜையா? என ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போஸ்டரின் அப்டேட் நாளை காலை 11 மணிக்கு தெரிய வரும்.