மாடு, ஜல்லிக்கட்டு ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம் வாடி வாசல். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா இப்படத்தில் நடிக்க உள்ளார். நேற்று சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாடி வாசல் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோவில் சூர்யா மாட்டோடு பயிற்சி எடுப்பது போல் உள்ளது. மேலும் மாடுபிடி வீரர்களிடம் இருந்து நுட்பங்களை கற்றுக் கொள்வதைப் போல் உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விடீயோவின் ஆரம்பத்தில் ‘சூர்யா மாடு பிடி வீரர்களிடமிருந்து ஏறுதழுவலின் நுட்பங்களை பயின்றபோது படம் பிடிக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு. வாடி வாசல் திரைப்படத்தின் முன்னோட்டமல்ல’ என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சூரியா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகர் விருதை சூர்யா பெற்றார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அபர்ணா பாலமுரளி மற்றும் சிறந்த இசை அமைப்பாளர் விருதை ஜி.வி. பிரகாஷ் பெற்றார். மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக் கதை விருதுகளை சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் பெற்றிருந்தனர். இந்த சாதனைக்காக திரைப்பட பிரபலங்கள் நடிகர் ரஜினிகாந்த், மமூட்டி மற்றும் பலர் பாராட்டி வந்தனர். மேலும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

வாழ்த்து மழையில் நனைந்த இப்பட குழு மற்றும் சூர்யாவிற்கு அடுத்த ட்ரீட்டாக இந்த வீடியோ அமைந்து உள்ளது. அதையே ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வீடியோ அடுத்த சர்ப்ரைசாக அமைந்து உள்ளது. தேசிய விருதுகள், பிறந்தநாள், வாடிவாசல் வீடியோ என அடுத்தடுத்த ட்ரீட்டாக இந்த வாரம் சூர்யா ரசிகர்களுக்கு அமைந்து உள்ளது. இதோ அந்த வைரல் வீடியோ 👇
Youtube Video Code Embed Credits: Kalaippuli S Thanu