சுஷாந்த்தின் உருவம் பதிக்கப்பட்ட T-ஷர்ட்டால் வந்த சர்ச்சை! – வலுக்கும் எதிர்ப்பு!😡

பாலிவுட் நடிகரான சுஷாந் சிங் ராஜ்புட் ‘எம்.எஸ்.தோனி அன்டோல்டு ஸ்டோரி’ திரைப்படம் மூலம் புகழ் பெற்றவர். அவர் 2020ஆம் வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 34. அவர் மரணம் பல சர்ச்சையை கிளப்பியது. மன அழுத்தத்தால் தான் அவர் இறந்தார் என ஒரு தரப்பு கூற இன்னோரு தரப்பினர் கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறினர்.

sushant-singh-rajput
Sushant Singh Rajput

பெரும் சர்ச்சையை கிளப்பிய அவரது மரணம் பெரும் பேசு பொருளானது. பின்பு மரணத்தோடு போதைப்பொருளை தொடர்பு படுத்தி பல பாலிவுட் பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கினர். இன்று வரை அவரது மரணத்தின் காரணம் கேள்வி குறியாகவே உள்ளது. ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் அவரது மரணத்தை மறந்து விட மாட்டார்கள். இந்நிலையில் பிரபல ஆன்லைன் தளங்களில் அவரது உருவம் அச்சிடப்பட்ட டீ-ஷர்ட்டுகள் விற்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

sushant-tshirt

அந்த டீ-ஷர்ட்டில் ‘Depression is like drowning‘ என அச்சிடப்பட்டுள்ளது. அதற்கு ‘மனஅழுத்தமானது நீரில் மூழ்குவது போன்றது’ என பொருள் ஆகும். இதனால் ஆத்திரமடைந்த அவரது ரசிகர்கள் அவர் இறந்ததை தவறாக சித்தரிப்பதை போல் உள்ளது என கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதை பற்றி ஏதும் அதிகாரபூர்வமாக ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஏதும் தெரிவிக்கவில்லை. மேலும் இவ்வளவு எதிர்ப்புகள் வந்ததால் அவர் உருவம் பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட்களை நீக்கி உள்ளது.

Spread the Info

Leave a Comment