சுஸ்மிதா செனை தெரியாத 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்ஸே இருக்க முடியாது. 1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற இவர் முன்னனி நடிகையாக வலம் வருபவர். ரட்சகன் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அந்த காலகட்டத்தில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருந்தது. 46 வயதாகும் இவர் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

தற்போது தொழிலதிபர் லலித் மோடியுடன் நீண்ட நாட்களாக டேட்டிங்கில் உள்ளதாக தகவல்கள் கசிந்தது. இந்நிலையில் தற்போது திருமணம் செய்ய போவதாக அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் சூதாட்டம் தொடர்பான பல குற்றச்சாட்டுகளில் சிக்கி இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தவர் லலித் மோடி. இவர் தற்போது மாலத்தீவு மற்றும் உலக சுற்றுலாவை முடித்த லண்டனுக்கு வந்துளோம். மேலும் நாங்கள் புது வாழ்க்கைய ஆரம்பிக்க உள்ளோம். கல்யாணம் செய்யும் எண்ணம் இல்லை தேவைப்பட்டால் அதுவும் நடக்கும் என கூறியுள்ளார்.

இதில் சுவாரசியம் என்னவென்றால் 9 வருடத்திற்கு முன்னர் இருவரும் செய்த டிவீட்ஸ் நெட்டிசன்கள் இடையே viral ஆகி உள்ளது. 2013ஆம் ஆண்டு போடப்பட்ட டீவீட்டில் எனது SMSசிற்கு reply செய்யுமாறு கேட்டிருந்தார். அந்த SMSசிற்கு பதில் வர 9 ஆண்டுகள் எடுத்துள்ளது மேலும் நல்ல விஷயங்கள் நடக்க காலம் எடுக்கும் எனவும் நெட்டிசன்களிடையே பேசும் பொருளாகி உள்ளது. இதோ அந்த ட்வீட்👇
