‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மாளவிகா மோஹனன். கடந்த 4ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு 29 வயது ஆகிறது. பேட்ட படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தோன்றி இருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு அடையாளம் கொடுத்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ படம்தான். இப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை அடுத்து தனுஷ் நடித்த ‘மாறன்’ படத்தில் நடித்து இருந்தார்.

ஓ.டி.டியில் வெளியான இப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றது. இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். தனது கவர்ச்சி படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம்.

லைக்ஸ்கலை அள்ளும் அவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். மாலத்தீவு மற்றும் பிற வெளிநாட்டு சுற்றுலாக்களுக்கு சென்று தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது முடிந்த அவரது 29வது பிறந்த நாளை ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி கொண்டாடினர். இதில் அவருடைய நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த பிறந்த நாளில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டுள்ளார். விஜய் சேதுபதி மற்றும் நண்பர்களோடு எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது இந்த பிறந்தநாளை சிறப்பாக உருவாக்கி நேசிக்க செய்த அனைவருக்கும் அன்பு மட்டுமே என கூறியுள்ளார்.